×

ரத்தான ஐடி சட்டத்தில் வழக்கு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி:  தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66ஏ-வில், `சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடக் கூடாது. மீறினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இச்சட்டப்பிரிவு, அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி ரத்து செய்து 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட இப்பிரிவின் கீழ் இன்னமும் போலீசார் வழக்கு பதிந்து வருவதாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரத்தான சட்டத்தின் கீழ் எப்படி எப்ஐஆர் பதிவு செய்ய முடியும்? என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ரத்து செய்த சட்டப்பிரிவின் கீழ் இன்னமும் வழக்கு பதிவது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக மாநில அரசுகள், உயர்நீதிமன்ற பதிவாளர்கள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court
× RELATED இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய செயல்...